What Is Oracle? அது என்னாப்பா ஆரக்கில்ன்னா? கொஞ்சம் விவரமா சொல்லு!
முதலில் இந்த Tableஎன்றால் என்ன என்று கொஞ்சம் தெரிந்துகொள்ளாமா?அதாவது நமக்கு வேண்டிய விபரங்களை வெறும் பேப்பர்களில் எழுதிவைக்கும் போது என்ன செய்கிறோம்?ஒரு நோட்டிலோ அல்லது ஒரு காகிதத்திலோ இவ்வாறு எழுதுவோம் என்று வைத்துக்கொள்வோம்!....
வரிசை எண்: 1
விபரம்: தேநீர் செலவு
செலவு பைசா :ரூ 50
Date: 02-MAy-2011
செலவு செய்த இடம்:வடகாடு
செலவு பற்றிய கூடுதல் குறிப்பு:பல மொக்கை நண்பர்கள் உடன் இருந்தனர்?
இவ்வாறு செலவு கணக்கு கூடிக்கொண்டே போகும்...அந்த வகையில் பல ஆயிரக்கணக்கான பக்கங்கள் சேமிக்கப்பட்டபின்பு ஒருநாள் திடீரென ஒரு குறிப்பிட்ட கணக்கை தேடவேண்டியுள்ளது.அந்த நேரத்தில் எப்படி அந்த குறிப்பிட்ட பக்கத்தையும் கணக்கையும் பார்ப்பது?இந்த பிரச்சனைகளை களைந்து உலக பொதுவான தீர்வை கொண்டு வர மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் உருவாக்கப்பட்டதே Database Management System (DBMS) அதன் அடுத்த பரிணாமமே RDBMS அதனை தன் வசத்தில்...Oracle Database என்று Oracle என்ற நிறுவனம் வெளிப்படையாக வெளியிட்டது.அதாவது RDBMSயை மிக நேர்த்தியாக பயன்படுத்தி அதை ஒரு product ஆக வெளியிட்டது.அதுவே இன்றைய Oracle (commonly referred to as Oracle RDBMS or simply as Oracle..தொடரும் ......
0 comments:
Post a Comment